உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு மாவட்டத்தை புரட்டிப்போட்ட மழை 775 ஏரிகள் நிரம்பின; 8,750 ஏக்கர் நெற்பயிர் நாசம்

செங்கல்பட்டு மாவட்டத்தை புரட்டிப்போட்ட மழை 775 ஏரிகள் நிரம்பின; 8,750 ஏக்கர் நெற்பயிர் நாசம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, மாவட்டத்திலுள்ள 775 ஏரிகள் நிரம்பி, பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால், 8,750 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தரைப்பாலங்கள் மூழ்கியும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.* 8,750 ஏக்கர் பயிர் நாசம்செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள எட்டு தாலுகாவில் கிணறு, ஆழ்த்துளை கிணறு, ஏரிபாசனம் வாயிலாக, நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த இரு நாட்களாக பெய்த மழையில், மாவட்டத்தில் 8,750 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதில், அச்சிறுப்பாக்கம் பகுதியில், 875 ஏக்கர் நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நீரில் மூழ்கி நாசமானது. வேளாண் துறை அதிகாரிகள், பாதிப்பை கணக்கெடுத்து வருகின்றனர்.ரயில்கள் மெதுவாக இயக்கம்கனமழையால் ஆறு மற்றும் ஏரிகள் நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறுகிறது. இதனால், ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து செல்லும் பாலங்களில் வெள்ள நீர் செல்வதால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ், வைகை, சோழன், செங்கோட்டை, பல்லவன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் என, அனைத்து விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களும், நேற்று அதிகாலை முதல் தற்போது வரை, விழுப்புரம் -- செங்கல்பட்டு சந்திப்பு இடையே தாமதமாக வந்தடைந்தன.குறிப்பாக, மதுராந்தகம் கிளியாறு மற்றும் மாமண்டூர் பாலாறு போன்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால், ரயில்வே பாலத்தை கடந்து செல்லும் ரயில்களின் வேகத்தை குறைத்து, 30 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.இதனால், சென்னை சென்ற அனைத்து ரயில்களும், ஒரு மணி நேரம் தாமதமாக சென்றடைந்துள்ளன.பள்ளியில் மழைநீர்செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேருராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், பேரூராட்சி அலுவலகம் எதிரே அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.1,000க்கும் அதிகமானோர் பயிலும் இவ்விரு பள்ளி வளாகங்களில் மழைநீர் சூழ்ந்து, மாணவியர் அவதிப்பட்டனர். இதனால், இரண்டு பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.775 ஏரிகள் 'புல்'செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை பெய்த மழையில், 377 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன.ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 620 ஏரிகளில், 398 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன. 2,512 குளங்களில், 1,878 குளங்கள் முழுதாக நிரம்பி உள்ளன.* மூழ்கிய தரைப்பாலங்கள்சிங்கபெருமாள் கோவில் -- பாலுார் சாலை வழியாக, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.இதில், வெண்பாக்கம் -- ரெட்டிபாளையம் இடையே, தென்னேரி ஏரி உபரி நீர் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் செல்லும் நீஞ்சல் மதகு கால்வாய் உள்ளது.ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம். 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக, கடந்த 1ம் தேதி இந்த தரைப்பாலம் மற்றும் அருகிலுள்ள சாஸ்திரம்பாக்கம்- - வில்லியம்பாக்கம் சாலையிலுள்ள தரைப்பாலமும் தண்ணீரில் முழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, நேற்று மீண்டும் இரண்டு தரைப்பாலங்களும் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. கிராம மக்கள் மற்றும் புதிதாக வரும் வாகன ஓட்டிகள், பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.* பனையூரில் பாதிப்புசெய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட, 5வது வார்டு பனையூர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையால், பனையூர் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பகுதி, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வாக உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து, வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்து உள்ளன.* வீடுகளில் புகுந்த கழிவு நீர்செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்குள்ள தெருக்களில் சில ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாயை உயர்த்தி கட்டினர். இதனால், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் தெருக்களில் தண்ணீர் தேங்கி, கழிவுநீரும் அதனுடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலையோர தடுப்பு சேதம்செய்யூர் அடுத்த திருப்புறக்கோவில் பகுதியில், பவுஞ்சூர் - செய்யூர் இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.பவுஞ்சூர், திருவாதுார், செங்காட்டூர், அம்மனுார் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக, பருவமழையின் போது செங்காட்டூர் ஏரி உபரிநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இந்த சாலை சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.இதையடுத்து, கடந்தாண்டு 15 லட்சம் ரூபாய் செலவில், நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, திருப்புறக்கோவில் பகுதியில் சாலையோர சிமென்ட் தடுப்பு அமைக்கப்பட்டது.கடந்த சில நாட்களாக பெய்த மழையால், செங்காட்டூர் ஏரி உபரிநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இந்த சாலையோர தடுப்புச்சுவர் சேதமடைந்தது. மேலும், சாலையோரம் பெரிய பள்ளம் ஏற்பட்டு, விபத்து அபாயம் நிலவுகிறது.பெருமாட்டுநல்லுாரில் அவதிகாட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி கூட்டு சாலையில், தனியார் பள்ளி உள்ளது. இப்பகுதியில் நேற்று மழைநீர் அதிக அளவில் தேங்கியது. இந்த கூட்டுச் சாலையில் இருந்து நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், அதிகமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.குறிப்பாக, கூடுவாஞ்சேரி சிக்னலில் இருந்து, நந்திவரம் - நெல்லிக்குப்பம் பிரதான சாலை வழியாக, பெருமாட்டுநல்லுார் கூட்டுச்சாலையைக் கடந்து, காயரம்பேடு வழியாக திருப்போரூர் வரை, தினமும் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன.ஒவ்வொரு மழைக்காலத்திலும், இந்த இடத்தில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் நெரிசலில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், இந்தாண்டு மழைக்கும் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை