உயர் கோபுர மின் விளக்கு காலவாக்கத்தில் பழுது
திருப்போரூர் திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் ஆறுவழிச்சாலை சந்திப்பில், ரவுண்டானாவில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.இந்நிலையில், உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து 15 நாட்களாக எரியாமல், இரவு நேரங்களில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது. சாலையை கடப்போர், பயணிப்போர் இருட்டில் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்று வருகின்றனர்.எனவே, பழுதடைந்த உயர்கோபுர விளக்கை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.