உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பசித்தால் உணவு எடுத்துக்கொள் திட்ட அன்னதான நிகழ்ச்சி

பசித்தால் உணவு எடுத்துக்கொள் திட்ட அன்னதான நிகழ்ச்சி

மதுராந்தகம், :மதுராந்தகம் தாலுகா கருங்குழி அருகே மேலவளம்பேட்டையில், 'பசித்தால் உணவு எடுத்துக்கொள்' திட்டத்தில் நேற்று, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலவளம்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் சரவணன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக, எழுத்தாளர் மற்றும் மணிமேகலை பிரசுர பதிப்பாளர் லேனா தமிழ்வாணன் பங்கேற்றார். நிகழ்வில், மதுராந்தகம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று, பள்ளியளவில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. பின், பசித்தால் உணவு எடுத்துக் கொள்' நிகழ்வு துவங்கப்பட்டு, ஆயிரமாவது நாளையொட்டி, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், உதவும் கரங்கள் அமைப்பினர் மற்றும் அப்பகுதி தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ