தொடக்கக் கல்வி பட்டய தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க கல்வி பட்டய தேர்வு தனித்தேர்வர்கள், 18ம் தேதியில் இருந்து, வரும் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், களியாண்பூண்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தமிழ்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், 18ம் தேதி முதல், வரும் 24ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர, அரசு வேலை நாட்களில், காலை 10:00 மணி முதல், மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ், வரும் 25, 26ம் தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை காஞ்சிபுரம் மாவட்டம், களியாம்பூண்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக, மேற்குறிப்பிட்ட நாட்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஏற்கனவே தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் இணைத்து, தேர்வு கட்டணத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தேர்வு கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 50 ரூபாய். தனித்தனியே முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் பெற 100 ரூபாய், பதிவு மற்றும் சேவை கட்டணத்திற்கு 15 ரூபாய், ஆன்லைன் பதிவு கட்டணம் 70 ரூபாய், சிறப்பு அனுமதி திட்டம் கூடுதலாக 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.