உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனிநபர்கள் டூ - வீலரை நிறுத்தி அடாவடி கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் அவதி

தனிநபர்கள் டூ - வீலரை நிறுத்தி அடாவடி கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் அவதி

கூடுவாஞ்சேரி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும், 80க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் தாம்பரம், சென்னை, திருப்போரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.இப்பேருந்து நிலையத்தை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக, பேருந்து நிலைய வளாகத்திற்குள், தனி நபர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, பணி நிமித்தமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.பின், இரவு நேரத்தில் திரும்பி வந்து, பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது இருசக்கர வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால், பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்து ஓட்டுனர்களுக்கும், பயணியருக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. அதனால், தனிநபர்கள் இங்கு வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:பேருந்து நிலைய வளாகத்திற்குள் ஆங்காங்கே, தனி நபர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை கண்டபடி நிறுத்திவிட்டுச் செல்வது, பலவகையில் அனைவருக்கும் இடையூறாக உள்ளது. பேருந்து நிலைய வளாகமே, இலவச 'பார்க்கிங்' போன்று மாற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து யாராவது தட்டிக் கேட்டால், அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. கூடுவாஞ்சேரி போக்குவரத்து துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, பேருந்து நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, வாகன உரிமையாளர்களுக்கு அதிக அபராதம் விதித்து, உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை