மேலும் செய்திகள்
கிராம சேவை மைய கட்டடத்தில் அங்கன்வாடி
18-Dec-2024
பி.வி.களத்துார், பொன்விளைந்தகளத்துாரில், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் தொடக்கப்பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த கட்டடம் கடுமையாக சேதமடைந்து, மழைக்காலத்தில் மழைநீர் உள்ளே செல்கிறது. அப்போது அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்படுகின்றனர்.இம்மையம், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றி, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சமூக நலத்துறை திட்ட அலுவலர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, பெரிய விபத்துக்கள் நடப்பதற்குள், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக நல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே, குழந்தைகள் நலன் கருதி, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
18-Dec-2024