வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
சித்தாமூர்:சித்தாமூர் அருகே பெருக்கரணை ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.விநாயகர் கோவில் அருகே 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வந்தது.முறையான பராமரிப்பு இன்றி , கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள சிமென்ட் பூச்சு உதிர்ந்து, விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. இதனால் பெருக்கரணை மலையடிவாரத்தில் உள்ள கிராம சேவை கட்டடத்தில் செயல்படுகிறது.வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் பெற கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மக்கள் நீண்ட துாரம் செல்ல வேண்டி உள்ளதால், பழைய கிராம நிர்வாக அலுவலகத்தை அகற்றி புதிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.