| ADDED : பிப் 11, 2024 11:42 PM
மதுராந்தகம் : மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில், பி.எஸ். என்.எல்., அலுவலகத்தில் இருந்து மதுராந்தகம் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் வரையிலான 500 மீட்டர் துாரத்திற்கு, சாலையோரம் மண் குவியல் ஏற்பட்டுள்ளது.இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.ஒரே சமயத்தில், இரண்டு பேருந்துகள், கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் வெள்ளை கோடு பகுதியில் ஒதுங்கி செல்ல முடியாத சூழல் உள்ளது.சிலர், மண் சறுக்கி, கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சாலையோரம் உள்ள மண் குவியலை, உரிய துறை சார்ந்த அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.