உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செல்லப்பிராணிகள் விபரம் பதிவேற்ற அறிவுறுத்தல்

செல்லப்பிராணிகள் விபரம் பதிவேற்ற அறிவுறுத்தல்

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், செல்லப் பிராணி களுக்கு தடுப்பூசி செலுத்திய விபரத்தை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, உரிமச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களில், தங்களது செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்திய விபரம் மற்றும் கால்நடை மருத்துவரின் விபரங்களை, tcmcpublichealth.inPetAnimalRegister என்ற இணையதளத்தில், அவற்றின் உரிமையாளர்கள் பதிவேற்றம் செய்து, உரிமச் சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். வழங்கப்பட்ட தேதியிலிருந்து, ஓராண்டு காலத்திற்கு உரிமச் சான்றிதழ் செல்லுபடியாகும். காலாவதியான உரிமச் சான்றிதழை, மேற்கண்ட இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ