உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சர்வதேச பலுான் திருவிழா திருவிடந்தையில் இன்று துவக்கம்

சர்வதேச பலுான் திருவிழா திருவிடந்தையில் இன்று துவக்கம்

சென்னை:தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில், நடப்பாண்டில் சென்னை, பொள்ளாச்சி, மதுரை ஆகிய நகரங்களில், இன்று துவங்கி வரும் 19ம் தேதி வரை, 10 நாட்கள் பலுான் திருவிழா நடக்கிறது.சென்னையில், கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் அடுத்த திருவிடந்தையில், இன்று முதல் மூன்று நாட்கள் பலுான் திருவிழா நடக்கிறது.இதில் தாய்லாந்து, பெல்ஜியம், பிரேசில், வியட்நாம், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, விதவிதமான ராட்சத பலுான்கள் இடம் பெறுகின்றன. இதுகுறிதது, சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியதாவது:பொதுமக்கள் பிற்பகல் 3:00 முதல் இரவு 9:30 மணி வரை அனுமதிக்கப்படுவர். குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் 200 ரூபாய் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tnibf.com இணையதளத்தின் வாயிலாக, டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விழாவில், மாலை 5:30 மணிக்கு வெப்ப காற்று பலுான்களும், 6:30 மணிக்கு இரவில் ஒளிரும் பலுான்களும் காட்சிப்படுத்தப்படும். உணவு அரங்குகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி