உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காய்கறி, பழச்செடி விதைகள் இலவசமாக பெற அழைப்பு

காய்கறி, பழச்செடி விதைகள் இலவசமாக பெற அழைப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் சார்பில் காய்கறி, பழச்செடி தொகுப்புகள் இலவசமாக வழங்கப் படுகின்றன. மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், ஜூலை 4ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், மக்களின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகை போன்ற காய்கறி விதைகள் அடங்கிய, 60 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பு, இலவசமாக வழங்கப்படுகிறது. பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய 100 ரூபாய் மதிப்பிலான பழச்செடி தொகுப்பு, தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீதம் மானியத்தில், இலவசமாக வழங்கப் படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், உழவன் செயலி http;tnhorticulture.tngov.in/kit என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ