உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெண்புள்ளி உள்ளோருக்கான சுயம்வரம் ஆவணங்களுடன் பதிவு செய்ய அழைப்பு

வெண்புள்ளி உள்ளோருக்கான சுயம்வரம் ஆவணங்களுடன் பதிவு செய்ய அழைப்பு

தாம்பரம்:வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம், வெண்புள்ளிகள் உள்ளோருக்கான சுயம்வரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.வெண்புள்ளிகள் உள்ளவர்களை, அவர்களது சொந்த உறவுகள் கூட திருமணம் செய்துகொள்ள முன்வருவதில்லை.நிறைய படித்திருந்தாலும், நல்ல சம்பளம் வாங்கினாலும், உயர் பதவியில் இருந்தாலும், திருமணம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.வெண்புள்ளிகள் நோயல்ல; அது பிறருக்கு தொற்றாது; பரம்பரை பரம்பரையாக வராது என்பது அறிவியல் உண்மையாக இருந்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், வெண்புள்ளிகள் உள்ளவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இதை கருத்தில் கொண்டு, வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம், இலவச சுயம்வரத்தை நடத்தி வருகிறது. இதுவரை, 402 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது.வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கான 14வது சுயம்வரம், வரும் ஜூன் மாதம், திருவாரூரில் நடைபெற உள்ளது.வெண்புள்ளிகள் உள்ள, திருமண வயதை எட்டியுள்ள ஆண், பெண் இருவரும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.இதில் பங்கேற்க எவ்வித கட்டணமும் இல்லை. திருமண வயதை எட்டியுள்ள ஆண், பெண் இருவரும், மே மாதம் இறுதிக்குள், தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.புகைப்படம், பிறப்பு, படிப்பு மற்றும் இருப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சுய வாக்குமூலம் மற்றும் கையெழுத்து, ஊதிய சீட்டு ஆகிய ஆவணங்களுடன், வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம், எண்: 4/8 தெய்வ நகர் முதல் தெரு, படேல் நகர், மேற்கு தாம்பரம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.தேவைப்பட்டால், 98400 52464, 044- - 2226 5507 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ