உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகர் உயர்மட்ட நடைபாலத்திற்காக இரும்பு படிக்கட்டு, தடுப்புகள் அமைப்பு

மறைமலை நகர் உயர்மட்ட நடைபாலத்திற்காக இரும்பு படிக்கட்டு, தடுப்புகள் அமைப்பு

மறைமலை நகர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை, பெருங்களத்துார் முதல்- செட்டிபுண்ணியம் வரை எட்டு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டது.இதனால், சாலையைக் கடக்கும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பு மற்றும் காயமடைந்து வந்தனர்.இதையடுத்து, பொது மக்கள் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி., சாலையில் சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், தைலாவரம் உள்ளிட்ட ஏழு இடங்களில், இரும்பாலான உயர்மட்ட நடை பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதில், மறைமலை நகர் பேருந்து நிறுத்தம் அருகில், ஜி.எஸ்.டி., சாலையில் உயர்மட்ட நடை பாலம் அமைக்கும் பணிகள், கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தன.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, 200 அடி நீளம் 60 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தை, இரண்டு ராட்சத 'கிரேன்' இயந்திரங்கள் வாயிலாக பொருத்தும் பணிகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து இரும்பு படிக்கட்டுகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உயர்மட்ட நடை பாலம் கொண்டுவரப்படும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி