உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அன்னங்கால் - புறங்கால் சாலையில் இரும்பு தடுப்பு அமைப்பது அவசியம்

அன்னங்கால் - புறங்கால் சாலையில் இரும்பு தடுப்பு அமைப்பது அவசியம்

அச்சிறுபாக்கம்:கீழ் அத்திவாக்கம் அடுத்த அன்னங்கால் பகுதிக்குச் செல்லும் சாலையோர வளைவு பகுதியில், விபத்தை தவிர்க்கும் வகையில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.கடமலைப்புத்துாரில் இருந்து ஒரத்தி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, அன்னங்கால் வழியாக புறங்கால், கூனங்கரணை, ராஜாம்பாளையம், புத்துார் பகுதிக்குச் செல்லும் சாலையை, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.அந்த சாலையில், 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை வளைவுகள் உள்ளன.இந்த பகுதிகளில், எதிர் திசையில் வாகனங்கள் வரும் போது ஒதுங்கி நிற்க முடியாத சூழல் உள்ளது.இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள், இப்பகுதியில் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, முக்கிய சாலை வளைவு பகுதிகளில் இரும்பு தடுப்பு கம்பிகள் அல்லது சிமென்ட் கான்கிரீட் கட்டைகள் அமைக்க வேண்டும். இரவில் ஒளிரும் 'ஸ்டிக்கர்' பொருத்த, நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி