உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜெய்கோபால் கரோடியா மாநில சதுரங்க போட்டி

ஜெய்கோபால் கரோடியா மாநில சதுரங்க போட்டி

சென்னை:ஜெய்கோபால் கரோடியா மாநில சதுரங்க போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெய்கோபால் கரோடியா மெமோரியல் செஸ் அகாடமியின், 25வது வெள்ளி விழாவையொட்டி, மாநில சதுரங்க போட்டி, கொளத்துாரில் அக்., 12ம் தேதி நடக்கிறது. இதில், 7, 9, 11, 13 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும், தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் சிறுவர்களில் முதல் 12 பேருக்கும், சிறுமியரில் முதல் எட்டு பேருக்கும் பதக்கமும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர், அக்., 9ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, 044 - 2671 1820, என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை