உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் எட்டு தாலுகாவில் இன்று ஜமாபந்தி துவக்கம்

செங்கையில் எட்டு தாலுகாவில் இன்று ஜமாபந்தி துவக்கம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வருவாய்த்துறை ஆண்டு பசலி வருவாய் தீர்ப்பாய ஜமாபந்தி நிகழ்ச்சி, எட்டு தாலுகாக்களிலும் இன்று துவங்கி, 30ம் தேதிவரை நடக்கிறது.திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர், வருவாய் தீர்வாய அலுவலர் அருண்ராஜ் தலைமையில், ஜமாபந்தி இன்று, திருப்போரூர் குறுவட்டத்திற்கு துவங்குகிறது. நாளை நெல்லிக்குப்பம் குறுவட்டம், 16ம் தேதி கரும்பாக்கம் குறுவட்டம், 20ம் தேதி கேளம்பாக்கம் குறுவட்டம், 21ம் தேதி மானாமதி குறுவட்டம், 22ம் தேதி பையனுார் குறுவட்டத்திற்கு ஜமாபந்தி நடக்கிறது.வண்டலுார் தாலுகாவில், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் தீர்வாய அலுவலர் கணேஷ்குமார் தலைமையில், இன்று வண்டலுார் குறுவட்டம், நாளை கூடுவாஞ்சேரி குறுவட்டம், 16ம் தேதி மாம்பாக்கம் குறுவட்டத்திற்கு நடக்கிறது.திருக்கழுக்குன்றம் தாலுகாவில், செங்கல்பட்டு சப்- கலெக்டர், வருவாய் தீர்வாய அலுவலர் மாலதி ஹெலன் தலைமையில், இன்றும், நாளை மாமல்லபுரம் குறுவட்டத்திற்கும், 16, 20ம் தேதிகளில் திருக்கழுக்குன்றம் குறுவட்டம், 21, 22ம் தேதிகளில் நெரும்பூர் குறுவட்டம், 23, 27ம் தேதிகளில் பொன்விளைந்தகளத்துார் குறுவட்டத்திற்கும் நடக்கிறது.மதுராந்தகம் தாலுகாவில், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் தீர்வாய அலுவலர் ரம்யா தலைமையில் இன்று ஒரத்தி குறுவட்டம், நாளை ஒரத்தி, அச்சிறுபாக்கம் குறுவட்டம், 16ம் தேதி அச்சிறுபாக்கம் பெரும்பாக்கம் குறுவட்டம், 20ம் தேதி பெரும்பாக்கம் குறுவட்டத்திற்கு ஜமாபந்தி நடக்கிறது. மேலும், 21ம் தேதி எல்.எண்டத்துார் குறுவட்டம், 22, 23ம் தேதிகளில் வையாவூர் குறுவட்டம், 23, 27ம் தேதி கருங்குழி குறுவட்டம், 28ம் தேதி மதுராந்தகம் குறுவட்டம், 29ம் தேதி ஜாமின் எண்டத்துார் குறுவட்டம், 30ம் தேதி ஓணம்பாக்கம் குறுவட்டத்திற்கு நடக்கிறது.தாம்பரம் தாலுகாவில், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் தீர்வாய அலுவலர் முரளி தலைமையில், இன்று தாம்பரம் குறுவட்டம், 15ம் தேதி சிட்லபாக்கம், மாடம்பாக்கம் குறுவட்டங்கள், 16ம் தேதி மேடவாக்கம் குறுவட்டத்திற்கு ஜமாபந்தி நடக்கிறது.செய்யூர் தாலுகாவில், வருவாய் தீர்வாய அலுவலர் சாகிதா பர்வீன் தலைமையில், இன்று சித்தாமூர் குறுவட்டம், 15ம் தேதி சித்தாமூர் குறுவட்டம், சூணாம்பேடு குறுவட்டம், 16ம் தேதி, சூணாம்பேடு குறுவட்டம்.வரும், 20ம் தேதி கடப்பாக்கம் குறுவட்டம், 21ம் தேதி கடப்பாக்கம், கயப்பாக்கம் குறுவட்டம், 22ம் தேதி, கயப்பாக்கம், கொடூர் குறுவட்டம், 23 ம் தேதி கொடூர் குறுவட்டம், 27, 28 தேதிகளில் லத்துார், செய்யூர் குறுவட்டம், 29ம் தேதி செய்யூர் குறுவட்டத்திற்கு நடக்கிறது.செங்கல்பட்டு தாலுகாவில், வருவாய் தீர்வாய அலுவலர் ராஜன்பாபு தலைமையில், இன்று செங்கல்பட்டு குறுவட்டம், 15ம் தேதி பாலுார் குறுவட்டம், 16ம் தேதி ஆப்பூர் குறுவட்டம், 16ம் தேதி காட்டாங்கொளத்துார் குறுவட்டம், 20ம் தேதி சிங்கபெருமாள்கோவில் குறுவட்டத்திற்கு நடக்கிறது.பல்லாவரம் தாலுகாவில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் நரேந்திரன் தலைமையில், இன்று பல்லாவரம் குறுவட்டம், 15ம் தேதி பம்மல் குறுவட்டத்திற்கு ஜமாபந்தி நடக்கிறது.இந்த குறுவட்டங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, நில பட்டா மாற்றம், பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ