உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் கலச விளக்கு பூஜை விமரிசை

ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் கலச விளக்கு பூஜை விமரிசை

செங்கல்பட்டு:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் குருபீடத்தில், பங்காரு அடிகளார் திருவுருவச்சிலை நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, குருபீட கும்பாபிஷேக விழாவையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.அதன்பின், கலச விளக்கு வேள்வி பூஜையை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, இன்று காலை 7:00 மணிக்கு, குருபீடத்திற்கு கும்பாபிஷேகமும், பங்காரு அடிகளார் திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி