உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வரும் 2ல் கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி வைபவம்

வரும் 2ல் கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி வைபவம்

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவத்தின் போது, வள்ளி திருக்கல்யாண உற்சவமும், கந்த சஷ்டி விழா நிறைவில் தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும்.இந்தாண்டுக்கான மஹா கந்த சஷ்டி வைபவம், நவ., 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் வள்ளி, தெய்வானையுடன் கந்தசுவாமி வீதியுலா வருகிறார். பிரதான சூரம்சம்ஹார விழா, நவ., 7ம் தேதி நடக்கிறது; 8ம் தேதி திருக்கல்யாண வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.விழாவை முன்னிட்டு, கோவிலின் முன்புறம் முகப்பு அலங்காரத்துடன், ராஜ கோபுரம், சரவணப்பொய்கை குளம், 16 கால் மண்டபம் என, வளாகம் முழுதும் வண்ண மின்விளக்குகள் பொருத்தும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை