மேலும் செய்திகள்
விளாங்காடு ஊராட்சியில் சாலை வசதியின்றி அவதி
01-Nov-2025
அச்சிறுபாக்கம்: கரிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட, குக்கிராமப் பகுதிகளில், கான்கிரீட் கல் சாலை அமைக்க வேண்டுமென, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, கரிக்கிலி ஊராட்சி. இங்குள்ள கரிக்கிலி காலனி, கரிக்கிலி கிராமம், அண்ணா நகர், கரிக்கிலி ரோடு, கிருஷ்ணாபுரம், சித்தாமூர் காலனி, சித்தாமூர் கிராமம் மற்றும் கொளத்துார் ஆகிய பகுதிகளில், 15 ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சாலை சேதமடைந்து உள்ளது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். பல இடங்களில், சாலை இருந்த சுவடே தெரியாமல் உள்ளது. என வே, இப்பகுதியில் புதிதாக கான்கிரீட் கல் சாலை அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
01-Nov-2025