உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத காயரம்பேடு ஊராட்சி சாலைகள்

15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத காயரம்பேடு ஊராட்சி சாலைகள்

கூடுவாஞ்சேரி, : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சி நான்காவது வார்டுக்கு உட்பட்ட பிருந்தாவன் அவென்யூ, கண்ணதாசன் தெருவில், சாலைகள் படுமோசமாக உள்ளது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:காயரம்பேடு ஊராட்சி நான்காவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலைகள் மண் சாலையாக உள்ளன. இந்த சாலைகள், 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அதன் பின், சீரமைக்கப்படவில்லை.தற்போது, அந்த சாலை குண்டும் குழியுமாகவும், சகதியாகவும் உள்ளது. அதனால், இப்பகுதிவாசிகள் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் மழைக்காலங்களில் சேறும் சகதியுமான சாலையில், சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்கக்கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை.எனவே, நான்காவது வார்டுக்கு உட்பட்ட பிருந்தாவன் அவென்யூ, கண்ணதாசன் தெரு சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ