மேலும் செய்திகள்
தஞ்சாவூர் இளைஞர் சாலை விபத்தில் பலி
23-Jun-2025
சூணாம்பேடு:பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி வயல்வெளியில் விழுந்து, அங்கு காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி பலியாகினார்.சூணாம்பேடு அடுத்த சின்னகளக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன், 49: கூலித்தொழிலாளி.இவர் வேலைக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், தன் 'பஜாஜ் டிஸ்கவர்' பைக்கில் வீடு திரும்பினார்.சின்னகளக்காடி அருகே சென்ற போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் விழுந்தது.இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற செல்லப்பன் தடுமாறி, அருகே நாகமணி, 55, என்பவருக்குச் சொந்தமான வயல்வெளியில் விழுந்தார். அங்கு, காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சாலையில் சென்றவர்கள் இதைப் பார்த்து, சூணாம்பேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், செல்லப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து வழக்கு பதிந்து, நிலத்தின் உரிமையாளரான நாகமணி, மின்வேலி அமைக்க மின்சாரம் எடுக்கப்பட்ட மின் இணைப்பின் உரிமையாளர் நடராஜன், 60, ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
23-Jun-2025