மேலும் செய்திகள்
கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு
28-Sep-2024
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்துள்ள சீனிவாசபுரம் ஜி.எஸ்.டி., சாலையில், கிருபாகரன், 42, என்பவர் கம்ப்யூட்டர், லேப்டாப் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பணிகளை முடித்து வீட்டுக்கு சென்றார்.நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, நான்கு லேப்டாப்கள் திருடு போனது தெரிந்தது.இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
28-Sep-2024