உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாட்டரி விற்பனை: மூவர் கைது

லாட்டரி விற்பனை: மூவர் கைது

செங்கல்பட்டு,செங்கப்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இப்ராஹிம், 44 என்பவரை கடந்த 2ம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கோவை மாவட்டத்தில் இருந்து லாட்டரி சீட்டு கொண்டு வந்து விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து, கோவை மாவட்டம் சென்ற போலீசார், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ஜவாஹிருல்லா, 47, ரத்னபுரி பகுதியைச் சேர்ந்த ஷாஜகான், 40 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பர்கத் 39 ஆகியோரை கைது செய்து அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி