உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் விவசாயிகள் பீதி

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் விவசாயிகள் பீதி

திருப்போரூர், திருப்போரூர் அருகே, விளை நிலங்களின் மீது தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள விளை நிலங்களில், விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இப்பகுதி விளை நிலங்களின் வழியே செல்லும் மின்கம்பிகள், கையால் எட்டி தொடும் அளவிற்கு தாழ்வாகச் செல்கின்றன. இதனால், விளை நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள், அச்சத்தில் உள்ளனர்.பலத்த காற்று வீசும் போது மின்கம்பிகள் உரசி அறுந்து விழும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பீதியடைகின்றனர்.எனவே, விளை நிலங்களின் மீது தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க, மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை