உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கீழக்கண்டையில் விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கீழக்கண்டையில் விபத்து அபாயம்

பவுஞ்சூர்,:கீழக்கண்டை கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால், விபத்து அபாயம் நிலவுகிறது.பவுஞ்சூர் அருகே கீழக்கண்டை ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அப்பகுதி மக்களுக்கு மின் வினியோகம் செய்ய, ஜமீன் எண்டத்துார் துணை மின் நிலையம் மூலமாக மின் கம்பங்கள் நட்டு, பராமரிக்கப்படுகிறது.ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கண்டை காலனி பகுதியில் உள்ள பாலம் அருகே, குடியிருப்பு பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.இதனால், மின் விபத்து அச்சத்துடன் கிராமத்தினர் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.கீழக்கண்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்க உள்ளதால், சுவாமி திருவீதி உலா வரும் போது, மின்கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை