உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறைந்த மின்னழுத்த பிரச்னை பெருந்தண்டலம் கிராமத்தினர் அவதி

குறைந்த மின்னழுத்த பிரச்னை பெருந்தண்டலம் கிராமத்தினர் அவதி

மறைமலைநகர்:செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு, செம்பாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த கிராமத்தில் அடிக்கடி மின் தடை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக, கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது:பெருந்தண்டலம் கிராமத்தில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, குறைந்த மின்னழுத்த மற்றும் மின் தடை பிரச்னை ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக கிரைண்டர், மின்விசிறி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால், மின் விசிறி பயன்படுத்த முடியாததால் முதியவர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.மேலும், ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், கிராமத்தில் பல இடங்களில், மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதன் காரணமாகவும் மின் தடை ஏற்பட்டு வருகிறது.எனவே, குறைந்த மின்னழுத்த மற்றும் மின் தடை பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை