மேலும் செய்திகள்
மஹாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
10-Apr-2025
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே புளியரணங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தென்னம்பட்டு கிராமத்தில், பழமை வாய்ந்த கிராம தேவதையான தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.நேற்று முன்தினம், வேள்வி பூஜையுடன் யாகசாலையில் கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹுதி, விநாயகர் பூஜை உள்ளிட்ட நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.நேற்று, காலை 10:00 மணியளவில், சிவாச்சாரியார்கள் தலைமையில், யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தது.பின், வேத மந்திரங்கள் முழங்க, கோவில் மேல் கலசங்களுக்கும், உற்சவர் சிலைக்கும் புனித நீரால் ஜீரனோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில், சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
10-Apr-2025