உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காப்பு காட்டில் ஆண் உடல் மீட்பு

காப்பு காட்டில் ஆண் உடல் மீட்பு

சூணாம்பேடு:தோட்டச்சேரி காப்புக்காட்டில் உடல் சிதைந்த நிலையில் கிடந்த 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சூணாம்பேடு அடுத்த தோட்டச்சேரி கிராமத்தில் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காப்புக்காடு உள்ளது.நேற்று காட்டில் நுங்கு வெட்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் சென்றனர். காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அருகே சென்று பார்த்தபோது உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது.இதுகுறித்து சூணாம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை ஆய்வு செய்ததில் ஒரு மாதத்திற்கு முன் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசார், உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை