உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லபுரம் சுற்றுலா - பொங்கல் விழா திருப்போரூர் பகுதியில் நடத்திய அவலம்

மாமல்லபுரம் சுற்றுலா - பொங்கல் விழா திருப்போரூர் பகுதியில் நடத்திய அவலம்

மாமல்லபுரம்:சுற்றுலாத் துறையினர் கொண்டாடும் சுற்றுலா - பொங்கல் விழா, திருப்போரூர் பகுதிக்கு மாற்றப்பட்டதால், சுற்றுலா ஆர்வலர்கள் அதிருப்தியடைந்தனர்.தமிழக சுற்றுலாத்துறை சார்பில், மாமல்லபுரத்தில் கடந்த டிச., 22ம் தேதி துவக்கப்பட்ட இந்திய நாட்டிய விழா, வரும் 20ம் தேதி வரை, தொடர்ந்து நடக்கிறது. பரதம், கதகளி, ஒடிசி உள்ளிட்ட பாரம்பரிய நாட்டியங்கள், கரகம், காவடி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்திய, சர்வதேச பயணியர் கண்டு மகிழ்கின்றனர்.தமிழர் கலாசாரத்தில் விவசாயிகள், நெல் அறுவடையைத் தொடர்ந்து, சூரிய கடவுளை வழிபட்டு கொண்டாடும் தைப்பொங்கல் பண்டிகை குறிப்பிடத்தக்கது.இப்பண்டிகை கலாசாரம் குறித்து, மாமல்லபுரத்தில் திரளும் சர்வதேச பயணியரிடம் விளக்க, மாமல்லபுரம் அருகிலுள்ள கிராமத்தில், சுற்றுலாத் துறை சார்பில், சுற்றுலா - பொங்கல் விழா கொண்டாடப்படும்.பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கலன்று, கோவில் முன்புறம் சர்வதேச பயணியருடன், பானைகளில் பொங்கல் பொங்கி வழிபட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தி, மாட்டு வண்டிகளில் பயணியர் குதுாகலத்துடன் பயணிப்பர். தற்போது, மாமல்லபுரம் அருகிலுள்ள பகுதியையும், பொங்கல் நாட்களையும் தவிர்த்து, மாமல்லபுரத்திலிருந்து 25 கி.மீ.,யில், திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் நேற்று இவ்விழா நடத்தப்பட்டது. இதனால், சுற்றுலா ஆர்வலர்கள் அதிருப்தியடைந்தனர்.இதுகுறித்து, சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது:மாமல்லபுரம் அருகில், அதிகபட்சம் 5 கி.மீ.,ல் உள்ள கடம்பாடி, பெருமாளேரி ஆகிய இடங்களில் தான், சுற்றுலாத் துறையினர் பொங்கல் விழா நடத்துவர்.இங்குள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர், வழிகாட்டி ஆகியோரும், பயணியரை அழைத்துச் செல்வர். வழக்கத்திற்கு மாறாக, தற்போது 25 கி.மீ., துாரத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் நடத்தினர்.பயணியரை அழைத்துச் செல்ல, நாங்கள் ஆர்வம் காட்டாமல், குறைவான பயணியரே சென்றுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ