மேலும் செய்திகள்
போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் கைது
04-Dec-2025
செம்மஞ்சேரி: வட மாநில வாலிபரை இரும்பு கம்பியால் அடித்து பணம் பறித்த நபரை, போலீசார் கைது செய்தனர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜமால், 25. இவர், ஓ.எம்.ஆரில், நுாக்கம்பாளையம் பகுதியில் கட்டுமான பணி செய்து கொண்டு, அங்கேயே தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, 'டிபன்' வாங்கிக் கொண்டு தங்குமிடம் நோக்கி நடந்து சென்ற போது, குமரன் நகர் டாஸ்மாக் அருகே போதையில் வந்த நபர், இரும்பு கம்பியால் ஜமால் கையில் தாக்கி, பாக்கெட்டில் வைத்திருந்த, 500 ரூபாயை பறித்துக் கொண்டுதப்பினார். பலத்த காயமடைந்த ஜமால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரை விசாரித்த செம்மஞ்சேரி போலீசார், தையூரைச் சேர்ந்த விஷ்ணு, 21, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
04-Dec-2025