உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நண்பரை சுத்தியால் தாக்கியவர் கைது

நண்பரை சுத்தியால் தாக்கியவர் கைது

மறைமலை நகர், நண்பரை மது போதையில் சுத்தியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர்கள் தீர்த்தகிரி, 40, தயாநிதி, 41. நண்பர்களான இருவரும், மறைமலை நகரில் வாடகை வீட்டில் தங்கி எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை இருவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தயாநிதி அருகில் இருந்த சுத்தியை எடுத்து தீர்த்தகிரியை தாக்கி உள்ளார். லேசான காயங்களுடன் தப்பிய தீர்த்தகிரி தயாநிதியிடமிருந்து சுத்தியை பறித்து அவரை தலையில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த தயாநிதியை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டன. தீர்த்தகிரியை மறைமலை நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ