உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடனாக மது கேட்டவரை கத்தியால் தாக்கியவர் கைது

கடனாக மது கேட்டவரை கத்தியால் தாக்கியவர் கைது

சதுரங்கப்பட்டினம்: கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 26. நேற்று முன்தினம் இரவு, வாயலுார், பழைய பாலாற்று பாலத்தில், மூர்த்தி என்பவருடன் மது அருந்தினார்.அப்போது, அதே இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த, வாயலுாரைச் சேர்ந்த வினோத் என்ற விக்னேஷ், 33, உறவினர் பாபு ஆகியோர் மது அருந்தினர்.பிரகாஷிடம் கடனாக மது கேட்டு, வினோத் தொந்தரவு செய்துள்ளார். பிரகாஷ் மது தர மறுத்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.அதில், பிரகாஷும் மூர்த்தியும் சேர்ந்து, வினோத்தை பேனா கத்தியால் தாக்கியுள்ளனர். காயமடைந்த வினோத், சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். நேற்று, பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி