உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மது போதையில் வீடு புகுந்து வாலிபரை தாக்கியவர் கைது

மது போதையில் வீடு புகுந்து வாலிபரை தாக்கியவர் கைது

சென்னை: மது போதையில் வீடு புகுந்து தகராறு செய்து, வாலிபரை கல்லால் தாக்கிய நபரை, போலீசார் கைது செய்தனர். சென்னை, நெற்குன்றம் ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் ராஜ் கண்ணன், 22; மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் விடியற்காலை, காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், இவரது வீட்டுக்குள் நுழைந்து சத்தம் போட்டுள்ளார். இதை ராஜ் கண்ணன் தட்டிக் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், கார்த்திகேயன் கையாலும் கல்லாலும் ராஜ் கண்ணனை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார். இதில், காயமடைந்த ராஜ் கண்ணன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட நெற்குன்றத்தை சேர்ந்த கார்த்திகேயன், 28, என்பவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், கார்த்திகேயன் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட, இரண்டு குற்ற வழக்குகள் உள்ளது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை