உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்தித்தாள் பார்சல் திருடிய நபர் கைது

செய்தித்தாள் பார்சல் திருடிய நபர் கைது

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தாழம்பூரைச் சேர்ந்தவர் ராமு, 46. இவர், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி நாவலூரில், அனைத்து செய்தித்தாள்கள் விற்பனை கடை வைத்து முகவராக உள்ளார்.இவரது கடைக்கு தினமும் அதிகாலை 1:30 மணியிலிருந்து 5:00 மணி வரை அனைத்து தனியார் செய்தித்தாள் நிறுவனம் சார்ந்த செய்தித்தாள்கள் பார்சல்களாக கடையில் இறக்குமதி செய்யப்படுகிறது.இவற்றை பிரித்து சிறிய கடைகள் மற்றும் வாசகர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 22ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு இறக்குமதி செய்யப்பட்ட செய்தித்தாள் பார்சல்கள் குறைவாக இருந்துள்ளது.பின், கடை உரிமையாளர் கடையின் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.விசாரணையில், கோடம்பாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார், 50, என்பதும், கந்தன்சாவடி, நாவலூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் செய்தித்தாள்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை