உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமி பாலியல் தாக்குதல் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் தாக்குதல் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டுசிறுமியை பாலியல் தாக்குதல் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.குன்றத்துார் பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் என்ற அறிவழகன், 36, இவர், மூன்றரை வயது சிறுமியை 2019 ஏப்ரல் 13ம் தேதி பாலியல் தாக்குதல் செய்தார். சிறுமியின் தாய் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அறிவழகனுக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமாபானு, நேற்று தீர்ப்பளித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். அறிவழகனுக்கு, மருத்துவ பரிசோதனை செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை