உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இளம்பெண் குளிப்பதை படம் பிடித்தவருக்கு தர்மஅடி

இளம்பெண் குளிப்பதை படம் பிடித்தவருக்கு தர்மஅடி

பல்லாவரம், இளம்பெண் குளிப்பதை படம் பிடித்த நபரை, பகுதிமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். பல்லாவரத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் குளியலறையில், குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன், 25, என்பவர், மறைந்திருந்து மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்து, அப்பெண் கத்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, மணிகண்டனை பிடித்து, தர்மஅடி கொடுத்தனர். பின், போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், மணிகண்டன் வீடியோ எடுத்தது உறுதியானது. இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி