உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கள்ளக்காதலிக்காக மனைவியை கொல்ல முயன்றவருக்கு கம்பி

கள்ளக்காதலிக்காக மனைவியை கொல்ல முயன்றவருக்கு கம்பி

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் அருகே, கள்ளக் காதலியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனைவியை, கல்லால் அடித்து கொல்ல முயன்ற கணவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.கிளாம்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி, அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய், 25. இவர், ஏழு ஆண்டுகளுக்கு முன், தன் சகோதரி மகள் புஷ்பலதா, 27, என்பவரை திருமணம் செய்தார்.இந்நிலையில் விஜய்க்கும், கொளப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற திருமணமான பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, கடந்த 20ம் தேதி விஜய், ஸ்ரீமதியை திருமணம் செய்யப்போவதாக, தன் மனைவி புஷ்பலதாவிடம் கூறியுள்ளார்.இதற்கு புஷ்பலதா கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.கோபமடைந்த விஜய், வீட்டின் அருகே இருந்த கருங்கல்லை எடுத்து, புஷ்பலதாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.இதில் படுகாயமடைந்த புஷ்பலதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர், எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு, தலையில் 16 தையல்கள் போடப்பட்டன.பின், மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தல்படி, நேற்று முன்தினம் மாலை, கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் புஷ்பலதா அளித்த புகாரின்படி, விஜயை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை