உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், விளையாட்டு மைதானம் அருகில் சீமை கருவேல மரங்கள் நிறைந்த புதர் பகுதி உள்ளது.இங்குள்ள ஒரு மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலைநகர் போலீசாருக்கு நேற்று காலை 6:00 மணியளவில் தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர்.இதில், இறந்து கிடந்த நபர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மிரஜ், 31, என தெரிந்தது. கடந்த நான்கு மாதங்களாக மறைமலைநகர் அடுத்த செங்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த 12ம் தேதி, மொலைபோனில் தன் மனைவியிடம் பேசிய போது, சண்டை ஏற்பட்டுள்ளது.இதனால் மிரஜ் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது இந்த பகுதியில் துாக்கிட்டு இறந்து கிடந்தது தெரிந்தது.போலீசார் இதுகுறித்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை