உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவை சுற்றி இறைச்சி, உணவு கழிவுகள் கொட்டி அடாவடி

கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவை சுற்றி இறைச்சி, உணவு கழிவுகள் கொட்டி அடாவடி

கிளாம்பாக்கம்:வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலை ஓரத்தில், 16 ஏக்கர் பரப்பில், 15.2 கோடி ரூபாய் செலவில் காலநிலைப் பூங்கா உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.இதில் தொல்லியியல் விளக்க மையம், அகழிகள், மழைநீர் குளங்கள், உயர்மட்ட நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா, மைதானம், திறந்தவெளி அரங்கம், கண்காட்சி மேடைகள், மற்றும் நடை பயிற்சி பாதை என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.ஊரப்பாக்கம் மற்றும் சுற்றுப் பகுதியில் வசிப்போர், தினமும் காலை, மாலை வேளைகளில் இங்கு நடைபயிற்சி செய்கின்றனர்.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, பூங்காவின் ஒரு பக்க சுற்றுச் சுவர் ஓரம் உள்ள காலி நிலத்தில், இரவு நேரம், இறைச்சி கழிவுகள், உணவு கழிவுகள் மற்றும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.நடைபயிற்சி செல்வோர் கூறியதாவது:இந்த பூங்கா, காலை 5:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்துள்ளது. நடைபயிற்சி செய்யவும், குழந்தைகளுடன் பொழுது போக்கவும் சிறந்த இடமாக உள்ளது.இங்கு தினமும் 500க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி செய்கின்றனர். கடந்த ஒரு மாதமாக, பூங்காவின் சுற்று சுவருக்கு அடுத்து உள்ள காலி இடத்தில், குப்பை கொட்டுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது, இறைச்சி கழிவுகள், உணவு கழிவுகள் கொட்டப்படுவதால், அவை அழுகி, அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, பூங்காவை அடுத்துள்ள காலி இடத்தில், எவரும் குப்பை கொட்டாதபடி, நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, காலி இடத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ