உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் இணைந்து, -18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, நேற்று இலவச மருத்துவ முகாம் நடத்தின.அச்சிறுபாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இம்முகாமில், மாற்றுத்திறன் மாணவர்களை புதிதாக அடையாளம் காணுதல், அவர்களுக்கு மருத்துவச் சான்று வழங்குதல், புதிதாக தேசிய அடையாள அட்டை வாங்குவதற்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடைபெற்றன.இந்நிகழ்வில், அச்சிறுபாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் நந்தினி, மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் அங்கையர்கன்னி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பெற்றோர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ