உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கத்தில் மருத்துவ முகாம்

அச்சிறுபாக்கத்தில் மருத்துவ முகாம்

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், நேற்று நடந்தது. அச்சிறுபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, தமிழக முதல்வரின், 'நலம் காக்கும்' ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் சினேகா, அச்சிறுபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், சுகாதார துணை இயக்குநர் பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு, அனைத்து உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில், அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர். இந்நிகழ்வில், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ