மாமல்லையில் மருத்துவ முகாம்
மாமல்லபுரம்: சதுரங்கப்பட்டினம் வட்டார ஆரம்ப சுகாதார மைய நிர்வாகம் சார்பில், மாமல்லபுரம், செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடக்கிறது. பொது மருத்துவம், மகளிர், குழந்தைகள் ஆகியோர் நலன், இதயம், நுரையீரல், கண், காது, பல் உள்ளிட்ட சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெற செல்வோர் ஆதார், ரேஷன் ஆகிய அட்டைகளை கொண்டுவர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.