செங்கை கலெக்டர் ஆபீசில் திங்கள் கிழமை மருத்துவ முகாம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மருத்துவ முகாம் நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனையில், வாரந்தோறும் வியாழக்கிழமையில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.இந்த முகாம், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தரை தளம் 'பி பிளாக்'கில் நடக்க உள்ளது.இதில் முட நீக்கியல், கண், காது, மூக்கு, தொண்டை, நரம்பியல், மனநலம் பிரிவு டாக்டர்கள் மற்றும் குழந்தைகள் நல டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் பங்கேற்று, பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குவர். காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை முகாம் நடக்கிறது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.