உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆளவந்தார் கோவில் கட்டுமான பணி விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுரை

ஆளவந்தார் கோவில் கட்டுமான பணி விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுரை

மாமல்லபுரம்:நெம்மேலியில் ஆளவந்தார் திருவரசு கோவில் கட்டுமான பணியை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்துமாறு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார். ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி பகுதியில், ஆளவந்தார் திருவரசு கோவில் உள்ளது. இக்கோவில், ஆளவந்தார் கற்சிலையுடன் சிறிய சன்னிதியாக கடந்த 1967ல் அமைக்கப்பட்டு, வழிபாட்டில் உள்ளது. அவர் மறைந்த ஆடி பூரட்டாதி நட்சத்திர நாளில், ஆண்டுதோறும் குருபூஜை உத்சவம் நடத்தி, அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளடைவில் கோவில் பலமிழந்ததால், புதிய கோவில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2023ல் பாலாலயம் செய்து, 84 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. இக்கோவில் கடற்கரை உப்புக்காற்றால் அரிக்காத வகையில், பாறைக்கற்களில் கட்டப்படுகிறது. பணிகளை துவக்கி இரண்டு ஆண்டுகள் கடந்தும் முடிக்கப்படாமல் தாமதமாகிறது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில் கட்டுமானப் பணிகளை நேற்று முன்தினம் பார்வையிட்டார். கட்டுமானப் பணி குறித்து, செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்டறிந்து, விரைந்து பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை