உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / துாய்மை பணி மேற்கொள்ள ஊராட்சிகளுக்கு வாகனங்கள் அமைச்சர் அன்பரசன் வழங்கினார்

துாய்மை பணி மேற்கொள்ள ஊராட்சிகளுக்கு வாகனங்கள் அமைச்சர் அன்பரசன் வழங்கினார்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணி மேற்கொள்ள, 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துாய்மை வாகனங்களை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டத்தில், மத்திய அரசின் துாய்மை பாரத இயக்க திட்டம் மூலமாக, துாய்மை வாகனங்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில் பொழிச்சலுார், திரிசூலம், மூவரசம்பட்டு, அகரம்தென், கோவிலம்பாக்கம், ஒட்டியம்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கு, 14 டிராக்டர்கள், எட்டு மினி லாரிகள் வாங்கப்பட்டன. காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரப்பாக்கம், வல்லம், வீராபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஏழு டிராக்டர்கள் வாங்கப்பட்டன. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் பூதுார், மாமண்டூர், படாளம், சிலாவட்டம், வையாயூர் ஆகிய ஊராட்சிகளுக்கு ஐந்து டிராக்டர்கள், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரத்தி ஊராட்சிக்கு ஒரு டிராக்டர் வாங்கப்பட்டன. மொத்தம், 35 கனரக வாகனங்கள், 4 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டன. இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் இந்த வாகனங்களை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், ஊராட்சிகளுக்கு நேற்று வழங்கினார். இதில், கலெக்டர் சினேகா, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை