மேலும் செய்திகள்
குளித்தலை அரசு மருத்துவமனை கட்டுமான பணி நிறைவு
19-Sep-2025
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை பராமரிப்பை கண்காணிக்காத, தலைமை மருத்துவரை இடமாற்றம் செய்து, அமைச்சர் சுப்பிர மணியன் உத்தரவிட்டார். திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், பிற ஊழியர்கள் குறித்த நேரத்தில், பணிக்கு வராததாகவும், நோயாளிகளை அலட்சியப்படுத்துவதாகவும், புகார்கள் வந்தன. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று காலை 8:00 மணிக்கு திடீரென மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். புறநோயாளிகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை, மருந்து இருப்பு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். நோயாளிகளிடமும் விசாரித்த அவர், தலைமை டாக்டர் ஏன் இதுவரை வரவில்லை என, பிற ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். பிப்ரவரியில் புதிதாக திறக்கப்பட்ட கட்டடத்தை பார்வையிட்டார். முதல், இரண்டாம் தளங்களில் பராமரிக்கப்படாமல் துாசு படிந்துள்ளது, சுத்திகரிப்பு குடிநீர் சாதனத்தில் குருவிக்கூடு இருந்தது, 5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சில் திறந்தும், அதுகுறித்த கல்வெட்டு வைக்காதது கண்டு அதிருப்தியடைந்தார். புதிய கட்டடத்தில் சித்த மருத்துவ பிரிவிற்கு இடம் ஒதுக்கவும், மருத் துவமனை பராமரிப்பை கண் காணிக்காத தலைமை டாக்டர் ஜோன் ஜெலிசித்தாவை இடமாற்றம் செய்தும் அமைச்சர் உத்தரவிட்டார்.
19-Sep-2025