மேலும் செய்திகள்
செங்கையில் தொழிற்கடன் 1,852 பேருக்கு வழங்கல்
27-Oct-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சிறுபான்மையினருக்கான கடன் மேளா, இன்று துவங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன.இத்திட்டத்தின் வாயிலாக, செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், எட்டு தாலுகா தலைமை இடங்களிலும், சிறப்பு கடன் 20ம் தேதி வரை நடக்கிறது.மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர், கடன் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வட்டாரம் தேதிபல்லாவரம் 11.11.2024தாம்பரம் 12.11.2024வண்டலுார் 13.11.2024திருப்போரூர் 14.11.2024திருக்கழுக்குன்றம் 15.11.2024மதுராந்தகம் 18.11.2024செய்யூர் 19.11.2024செங்கல்பட்டு 20.11.2024
27-Oct-2024