உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆத்துார் சுங்கச்சாவடியில் பேருந்து நிறுத்தம் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ஆத்துார் சுங்கச்சாவடியில் பேருந்து நிறுத்தம் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு

அச்சிறுபாக்கம்:சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுபாக்கம் அருகே மாவட்ட எல்லை முடிவில், ஆத்துார் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.இந்த சுங்கச்சாவடியை கடந்து, இரு மார்க்கத்திலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என, நாள்தோறும் 6,000த்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் கடந்து செல்கின்றன.இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்துாரில் உள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தப்படுகின்றன.அதனால், சுங்கச்சாவடியை சுற்றியுள்ள ஒரத்தி, கீழ்அத்திவாக்கம், அனந்தமங்கலம், முருங்கை, வெளியம்பாக்கம், கொங்கரை மாம்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணிப்பூர், ஆத்துார், ஒலக்கூர், தொழுப்பேடு என, 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பயனற்றதாக உள்ளது.பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் என, நாள்தோறும் 1,000க்கும் மேற்பட்டோர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.திண்டிவனத்தில் இருந்து மேல்மருவத்துார், 35 கி.மீ., பயண துாரம் ஆகும். அரசு பேருந்துகளில், திண்டிவனம்- - மேல்மருவத்துாருக்கு 40 ரூபாய் பயண சீட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.திண்டிவனத்தில் இருந்து ஆத்துார் சுங்கச்சாவடி 25 கி.மீ., தொலைவில் உள்ளது. இருப்பினும், ஆத்துார் சுங்கச்சாவடியில் இருந்து மேல்மருவத்துார் செல்வதற்கு, 40 ரூபாய் பயண கட்டணமே வசூல் செய்கின்றனர்.எனவே, ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில், பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.முருங்கை கிராமத்தைச் சேர்ந்த பேருந்து பயணி ம.கங்காதரன், 35, கூறியதாவது:ஆத்துார் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையின் கடைசியில் உள்ள கிராமங்கள் என, 50க்கும் மேற்பட்டோர், ஆத்துார் சுங்கச்சாவடியில் நின்று, பேருந்துகளில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர்.ஆத்துார் சுங்கச்சாவடியில் இருந்து மேல்மருவத்துார், மதுராந்தகம் போன்ற பகுதிகளுக்கு 40 ரூபாய், 50 ரூபாய் என, பயண சீட்டு கட்டணம் வசூல் செய்கின்றனர்.இது குறித்து, பேருந்து நடத்துனர்களிடம் கேள்வி எழுப்பினால், விருப்பம் இருந்தால் பேருந்தில் பயணம் செய்யுங்கள்; பயண கட்டணம் 40 ரூபாய் தான், ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில் பேருந்தை நிறுத்தி, பயணியரை அழைத்துச் செல்ல வேண்டும் என, உத்தரவு இல்லை.இருப்பினும், மக்களின் நலனுக்காக பேருந்து நிறுத்தி அழைத்துச் செல்வதாக, பொதுமக்களிடம் நடத்துனர்கள் அடாவடியாக பதில் அளிக்கின்றனர்.இது குறித்து, அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்கவும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நின்று செல்லவும், பயணச்சீட்டு கட்டணத்தை வரைமுறைப்படுத்தி, குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை