உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் இரண்டாவது கணவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் இரண்டாவது கணவர் கைது

மறைமலைநகர்:மகள் முறை என்றும் பாராமல், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர். மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண், கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். கடந்த 2018ம் ஆண்டு அப்பெண், யுவராஜ், 31, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி வீட்டிற்கு போதையில் வந்த யுவராஜ், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம், மகள் முறை என்றும் பாராமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, உடலில் காயங்கள் ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் கூற, அவர் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து,'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், யுவராஜை தேடி வந்தனர். நேற்று காலை யுவராஜை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !