உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோர செடிகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையோர செடிகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

செய்யூர்: கடுக்கலுார் கிராமத்தில் சாலையோரத்தில் வளர்ந்து உள்ள செடிகளை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட கடுக்கலுார் கிராமத்தில் இருந்து வேலுார் கிராமத்திற்கு செல்லும் 2.5 கி.மீ., தார்ச்சாலை உள்ளது. சாலையை கல்பட்டு, வேலுார், கடுக்கலுார், சூரக்குப்பம், ஒத்தி விளாகம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இச்சாலையில் இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி என, தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சாலையோரத்தில் செடிகள் வளர்ந்து உள்ளதால், கனரக வாகனங்கள் வரும்போது, இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் ஒதுங்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், சாலையோரம் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ